தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு நடவடிக்கையாக தனியார் துறை ஆள்சேர்ப்பு சிறப்பு முகாம் ஆக. 30-ம் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். தகுதியுள்ள மனுதாரர்கள் தங்களது சுயகுறிப்புடன் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்றார் அவர்.

0 comments: