ஐந்து ஐந்து ஐந்து(555 movie review)விமர்சனம்
இயக்குனர் :சசி
நடிகர்கள் :பரத், மிருத்திகா, சந்தானம்
ஒளிப்பதிவாளர் (அறிமுகம்)
:சரவணன்
அபிமன்பு
இயக்குனர் சசி இயக்கத்தில் பரத் நடித்த படம் ஐந்து ஐந்து ஐந்து. இப்படம் கடந்த ஒன்றரை வருடங்களாக தயாராகி வந்தது. இப்படத்தில் பரத்துடன் மிருத்திகா மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்
படத்தின் கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன்
காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு
பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது… இப்போது நீ
குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை என
உன்னால் உணர முடிகிறது என அவருக்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், பரத்தின் அண்ணன் சந்தானமும் சொல்ல.. ஆனால் அதை பரத் நம்பமுடியாமல் தவிக்கிறார்.
ஏதோ உருத்தலில் மீண்டும் அந்தப் பெண் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறது, கூடவே ஒரு
கூட்டமும் இவரைத் துரத்துகிறது. அப்புறம், சண்டை போடுகிறார், சந்தானம் சாகிறார், போலிஸ் துரத்துகிறது, வில்லன் வருகிறார். அந்தக் காதலி உண்மையிலேயே இறந்தாளா இல்லையா, இதன் பின்னணியில் யார், என்ன காரணம் என நமக்கு சொல்லி படம் முடிகிறது. கதையில் சில
விசயங்களை சொன்னால் பார்க்க போகும் கொஞ்ச நஞ்ச பேருக்கும் சுவாரஸ்யம் குறையலாம் என்பதால் அதை
நீங்கள் வெள்ளித்திரையில்
பார்த்து தெரிந்து கோங்க..
இந்தப் படத்தின் மொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். அப்பவே நாம உசாராயிருக்னும். ட்ரைலரை நம்பி மோசம் போயிட்டோம்.
0 comments: